திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பணப்பரிமாற்ற முறைகேடு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது

IANS | Published: 10th June 2019 05:59 PM


இஸ்லாமாபாத்: போலியான வங்கிக் கணக்குகள் வைத்திருந்த வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார்.

போலி வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிமாற்ற முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு இன்று நடவடிக்கை எடுத்தது.

2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் ஆசிஃப் அலி ஜர்தாரி. இவர் பெனாசிர் பூட்டோவின் கணவரும் ஆவார்.

முன் ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று ஜர்தாரி தரப்பில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜர்தாரி, இன்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆளில்லா விமானத் தாக்குதல் எதிரொலி: சவூதி கச்சா எண்ணெய் உற்பத்தி திடீர் குறைப்பு
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பின்னடைவு: இம்ரான் கான் ஒப்புதல்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: பிளாக்மேன்
ஓமனில் விபத்து: இந்திய தம்பதி, குழந்தை பலி
காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் பள்ளி செல்ல ஐ.நா. உதவ வேண்டும்