உலகம்

நைஜீரியா பயங்கரவாத தாக்குதலில் 65 பேர் சாவு

29th Jul 2019 10:08 AM

ADVERTISEMENT

 

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போர்னோ எனுமிடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது போகோ ஹராம் எனும் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 65 பேர் உயிரிழந்தனர், 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இத்தகவலை அப்பகுதி அரசு அதிகாரி முஹம்மது புலாமா உறுதிபடுத்தியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக தங்களின் கிராமத்தின் மீது படையெடுத்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் 11 பேர் அப்பகுதி மக்கள் கொலை செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி, போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களா மசூதி, பேருந்து நிறுத்தம், அங்காடி உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து போகோ ஹராம் அங்கு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை மனித வெடிகுண்டுகளாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT