உலகம்

உக்ரைனில் நாடாளுமன்றத் தேர்தல்

22nd Jul 2019 01:23 AM

ADVERTISEMENT

உக்ரைன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரும் அக்டோபர் மாத இறுதியில் நடக்க வேண்டிய இந்தத் தேர்தல், புதிய அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி நாடாளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து, தற்போது முன்கூட்டியே நடைபெற்றுள்ளது. 
இந்தத் தேர்தலில், முன்னாள் நகைச்சுவை நடிகரான ùஸலென்ஸ்கி புதிதாகத் தொடங்கியுள்ள "மக்கள் சேவகன்' கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT