உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திடீர் மழை வெள்ளம்: 23 பேர் பலி

16th Jul 2019 03:33 AM

ADVERTISEMENT


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இடி-மின்னலுடன் பெய்த திடீர் கன மழையால் நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில்  23 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காணாமல் போய் விட்டனர்.
 லாஸ்வா பகுதியில் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், பல வீடுகள் இடிந்து விழுந்தன. பல் திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். 
இதுகுறித்து, அந்த மாநில பேரிடர் மேலாண்மைக்குழு அதிகாரி சையது அல் ரஹ்மான் குரேஷி கூறுகையில், ஒரே நாள் பெய்த கனமழையால் லாஸ்வா பகுதியில் ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.  பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர். பலர் நிலச்சரிவில் சிக்கியும், நீரில் அடித்துச் செல்லப்பட்டும் காணாமல் போய் விட்டனர். லாஸ்வாவின் சந்தைப்பகுதியும், இரண்டு மசூதிகளும் முற்றிலும் சேதமானது. 
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில், செல்லிடப்பேசி மற்றும் இணையதள சேவையும் முடக்கியது. 
மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைக் குழுவினர், போலீஸார் மற்றும் மீட்புக்குழுவினரும்  மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT