18 ஆகஸ்ட் 2019

வாடிகன் சவக்குழிகளில் ஆய்வு: 36 ஆண்டுகளுக்கு முன் சிறுமி மாயமான விவகாரத்தில் சிக்கல் அதிகரிப்பு

DIN | Published: 12th July 2019 01:07 AM
இமானுவேலா ஆர்லாண்டி


கத்தோலிக்க தலைமையகமான வாடிகனில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான சிறுமியைத் தேடி கல்லறையில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.
அந்தக் கல்லறையில், மாயமான சிறுமியின் சடலம் மட்டுமன்றி, அங்கு புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட இளவரசிகளின் எலும்புக் கூடுகளும் காணாமல் போயிருப்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வாடிகனில் பணியாற்றி வந்த எர்க்கோல் ஆர்லண்டியின் மகள் இமானுவேலா ஆர்லாண்டி, கடந்த 1983-ஆம் ஆண்டில் மாயமானார். காணாமல் போகும்போது 15 வயதான அவர், எங்கிருக்கிறார், எதனால் மாயமானார் என்பது இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், வாடிகனில் இரு இளவரசிகள் புதைக்கப்பட்டுள்ள கல்லறையில்தான் இமானுவேலாவும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
1836 மற்றும் 1840-ஆம் ஆண்டுகளில் அங்கு அந்த இளவரசிகளும் புதைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இமானுவேலா ஆர்லண்டி மாயமான விவகாரத்தில் நீடிக்கும் மர்மத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த கல்லறையில் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தடயவியல் நிபுணர்கள் அந்தக் கல்லறையில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். எனினும், அங்கு இமானுவேலா ஆர்லாண்டியின் எலும்புக் கூடுகள் காணப்படவில்லை.
அதுமட்டுமன்றி, அங்கு புதைக்கப்பட்டுள்ளதாக இதுவரை நம்பப்பட்டு வந்த இரு இளவரசிகளின் எலும்புக்கூடுகளும் கூட அங்கு காணப்படவில்லை. அதையடுத்து, இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.
தற்போது மர்மமான முறையில் மாயமான இமானுவேலாவை மட்டுமன்றி, இளவரசிகளின் எலும்புக் கூடுகளையும் தேட வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: 40 பேர் சாவு, 100 பேர் படுகாயம்
இந்தியா-பூடான் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
அணு ஆயுதம் தொடர்பான இந்தியாவின் கருத்து துரதிருஷ்டவசமானது: பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி
இருதரப்பு பேச்சு மூலம் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை: இம்ரான் கானிடம் டிரம்ப் வலியுறுத்தல்