மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் 1எம்டிபி முறைகேடு தொடர்பாக, ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும், ரஸாக்கின் உறவினருமான ரிஸா அஜீஸ் மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
நஜீப் ரஸாக் ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) என்ற அரசு நிறுவனம் மூலம், கடந்த 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் 24.8 கோடி டாலரை (சுமார் ரூ.1,700 கோடி) முறைகேடாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டைட்டானிக் பட நாயகர் லியோனார்டோ டிகேப்ரியோ நடித்த தி வோல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை ரிஸா அஜீஸ் தயாரித்துள்ளது நினைவுகூரத்தக்கது.