உலகம்

அதிகாரப் பகிர்வுக்கு சூடான் ராணுவம் சம்மதம்

6th Jul 2019 01:08 AM

ADVERTISEMENT


சூடானில் எதிர்க்கட்சியினருடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தனர்.
அந்த நாட்டு அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் 6 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டக் குழுவினருக்கும், ராணுவத்துக்கும் இடையே எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள் முன்னிலையில் 2 நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இதற்கான உடன்படிக்கை ஏற்பட்டது.
கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் காட்டூமில் தேசியக் கொடி ஏந்தி கொண்டாடினர் . புதிய ஒப்பந்தத்தின்படி, முதல் 18 மாதங்களுக்கு ராணுவத்திடம் இருக்கும் ஆட்சி, பிறகு சிவில் தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT