கென்ய ஹோட்டலில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பேர் பலி

கென்யா தலைநகர் நைரோபியிலுள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர்
நைரோபி ஹோட்டலில் தாக்குதலுக்குள்ளான வளாகத்திலிருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றும் பாதுகாப்புப் படையினர். 
நைரோபி ஹோட்டலில் தாக்குதலுக்குள்ளான வளாகத்திலிருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றும் பாதுகாப்புப் படையினர். 


கென்யா தலைநகர் நைரோபியிலுள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில், பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நைரோபியுள்ள டுஸிட்-டி2 என்ற நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் 101 அறைகள் கொண்ட ஹோட்டல், வெந்நீர் குளியல் சேவையளிக்கும் ஸ்பா மையம், உணவகம் மற்றும் அலுவலகக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தி வளாகத்துக்குள் நுழைந்தனர்.
அவர்களில் ஒரு பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்.
மேலும், அங்கிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
அதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணி நேரத்துக்கு நீடித்த இந்த நடவடிக்கையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா தெரிவித்தார். 
இந்தத் தாக்குதலில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்-அபாப் பயங்கரவாத அமைப்பு சோமாலியாவில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
எனினும், அந்த நாட்டில் அல்-அபாபுக்கு எதிரான நடவடிக்கைகளில் கென்ய ராணுவம் பங்கேற்று வருவதால், கென்யாவிலும் அந்த அமைப்பு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com