ஈரானின் செயற்கைக் கோள் திட்டம் தோல்வி

தனது சொந்த ராக்கெட் மூலம் விண்ணில் செயற்கைக்கோள் அனுப்பும் ஈரானின் திட்டம் தோல்வியடைந்தது.
பாயம் செயற்கைக்கோளை ஏந்தி, விண்ணில் சீறிப் பாயும் ஈரான் ராக்கெட்.
பாயம் செயற்கைக்கோளை ஏந்தி, விண்ணில் சீறிப் பாயும் ஈரான் ராக்கெட்.


தனது சொந்த ராக்கெட் மூலம் விண்ணில் செயற்கைக்கோள் அனுப்பும் ஈரானின் திட்டம் தோல்வியடைந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் முகமது ஜாவத் அஜாரி கூறியதாவது:
ஈரான் தயாரித்த பாயம் செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
எனினும், திட்டமிட்டபடி அதனை புவியின் சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்தது. முதல் மற்றும் இரண்டாவது கட்ட சோதனைகளின்போது பாயம் செயற்கைக்கோளும், அதன் ராக்கெட்டும் சிறப்பாக செயல்பட்டன.
எனினும், அதனை விண்ணில் செலுத்தும்போது ராக்கெட்டின் வேகம் போதுமான அளவுக்கு இல்லாததால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது என்றார் அவர்.
ஈரானின் இந்த செயற்கைக்கோள் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com