சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஈரானின் செயற்கைக் கோள் திட்டம் தோல்வி

DIN | Published: 17th January 2019 12:49 AM
பாயம் செயற்கைக்கோளை ஏந்தி, விண்ணில் சீறிப் பாயும் ஈரான் ராக்கெட்.


தனது சொந்த ராக்கெட் மூலம் விண்ணில் செயற்கைக்கோள் அனுப்பும் ஈரானின் திட்டம் தோல்வியடைந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் முகமது ஜாவத் அஜாரி கூறியதாவது:
ஈரான் தயாரித்த பாயம் செயற்கைக்கோள் செவ்வாய்க்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
எனினும், திட்டமிட்டபடி அதனை புவியின் சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்தது. முதல் மற்றும் இரண்டாவது கட்ட சோதனைகளின்போது பாயம் செயற்கைக்கோளும், அதன் ராக்கெட்டும் சிறப்பாக செயல்பட்டன.
எனினும், அதனை விண்ணில் செலுத்தும்போது ராக்கெட்டின் வேகம் போதுமான அளவுக்கு இல்லாததால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது என்றார் அவர்.
ஈரானின் இந்த செயற்கைக்கோள் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

More from the section

'நாட்டை முன்னேற்றுங்கள் பயங்கரவாதத்தை அல்ல'- அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே மோசமான சூழல் நிலவுகிறது: டொனால்டு டிரம்ப்
பாக். அரசுக் கட்டுப்பாட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையகம்
ஐ.நா. கண்டன அறிக்கையை தாமதப்படுத்திய சீனா
இந்தியா உபரி நதிநீரை நிறுத்துவதால் கவலை இல்லை: பாகிஸ்தான்