மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதை தடுப்பதற்காக மெக்ஸிகோவையொட்டிய எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும்
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதை தடுப்பதற்காக மெக்ஸிகோவையொட்டிய எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்காக நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 
முன்னதாக, அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குரிய இந்த திட்டம் தொடர்பாக ஆளும் குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு 137.5 கோடி டாலர் (சுமார் ரூ.9,700 கோடி) நிதி ஒதுக்கீடு செய்ய ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக் கொண்டனர். எல்லைச் சுவருக்காக அதிபர் டிரம்ப் கோரி வரும் 570 கோடி டாலரை விட (சுமார் ரூ.40,300 கோடி) இது மிகவும் குறைவாகும்.
மேலும், டிரம்ப் வலியுறுத்தி வந்தபடி கான்க்ரீட் சுவர்களை எழுப்ப ஜனநாயக கட்சியினர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் திட்டத்துக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அமெரிக்க ராணுவ கட்டுமானப் பணிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தடுப்புச் சுவர் திட்டத்துக்கு தேவையான நிதியை டிரம்ப் ஒதுக்க வாய்ப்பிருப்பதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, அதிபர் டிரம்ப்பின் முடிவு சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்றும் அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையின் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com