ஈரான் அணுமின் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
ஈரானின் பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்கரையில் உள்ள புஷேர் என்ற அணுமின் நிலையத்திற்கு கிழக்கே 53 கி.மீ தொலைவில் 38 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கணிசமான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.