ரஷ்யா, ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் பலனா நகரத்தின் தென்மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவிலும், 14 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதேபோல், ஈரானில் உள்ள புஷெர் அனுமின் நிலையம் அருகே இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது.
ADVERTISEMENT