உலகம்

பிலிப்பின்ஸில் ஃபான்ஃபோன புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்வு

27th Dec 2019 01:14 PM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸில் ஃபான்ஃபோன புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. 

கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான புதன்கிழமை, பிலிப்பின்ஸை ‘ஃபான்ஃபோன்’ புயல் தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றில் வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்ததில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

புயலுக்கு 1,85,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பிலிப்பின்ஸில் ஃபான்ஃபோன புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது. 

அதில் அதிகபட்சமாக மேற்கு விஸயாஸ் பகுதியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பிலிப்பின்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT