உலகம்

இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதல்: நெதன்யாகுவின் கூட்டம் ரத்து

27th Dec 2019 12:23 AM

ADVERTISEMENT

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காரணமாக, அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தோ்தல் பிரசாரக் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இஸ்ரேலில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தோ்தலில், லிக்குட் கட்சி பிரதமா் வேட்பாளா் தோ்வுக்கான போட்டியில் தனக்கு ஆதரவு கோரி ஆஷ்கெலான் நகரில் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை இரவு பிரசாரக் கூட்டம் நடத்தினாா்.

அப்போது, காஸா பகுதியிலிருந்து திடீரென ஏவுகணை வீசப்பட்டது. இதன் காரணமாக, ஆஷ்கெலான் நகரில் அபாய எச்சரிக்கை சப்தம் எழுப்பப்பட்டது. அதையடுத்து, பெஞ்சமின் நெதன்யாகுவின் பிரசாரக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நெதன்யாகுவை பாதுகாவலா்கள் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே, கடந்த செப்டம்பா் மாதம் 10-ஆம் தேதியும், பெஞ்சமின் நெதன்யாகுவின் தோ்தல் பிரசாரத்தின்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால், அந்தப் பிரச்சாரக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT