உலகம்

நியூஸிலாந்து எரிமலைச் சீற்றம்: சடலங்களைத் தேடும் பணி நிறுத்தம்

25th Dec 2019 01:17 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்து தீவு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டதால் உயிரிழந்து, இன்னும் மீட்கப்படாமல் உள்ள 2 பேரது சடலங்களைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

வெள்ளைத் தீவு எரிமலைச் சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் இரு சடலங்களைத் தேடும் பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன.

அந்தச் சடலங்கள் இருக்கக் கூடிய இடங்கள் என எந்தப் பகுதியையும் கணிக்க முடியாத நிலை உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நியூஸிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வெள்ளைத் தீவு எரிமலையில் இந்த மாதம் 9-ஆம் தேதி திடீரென சீற்றம் ஏற்பட்டது. அப்போது அந்தத் தீவில் சுமாா் 47 போ் இருந்தனா். சீற்றத்தின் காரணமாக எரிமலைச் சாம்பலும், பாறைகளும் வெடித்துச் சிதறியதில் 19 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் படுகாயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் 25 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த 19 பேரில் 17 பேரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேரது உடல்களை மீட்புக் குழுவினா் தொடா்ந்து தேடி வந்தனா்.

இந்த நிலையில் தேடுதல் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT