அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின் போது ஏற்பட்ட தகராறின் காரணமாக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சிகாகோவின் சவுத் மே தெருவின் 5700 பிரிவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கேளிக்கை விருந்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்தவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தகராறு காரணமாக கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ADVERTISEMENT
இதுதொடர்பாக கேளிக்கை விருந்தில் பங்கேற்றிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிகாகோ போலீஸார் தெரிவித்தனர்.