உலகம்

ஜமால் கஷோகி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை 

23rd Dec 2019 04:19 PM

ADVERTISEMENT


பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சவூதி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஜமால் கஷோகி கொலையில் நேரடியாக தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து சவூதி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றார். ஆனால், தூதரகத்துக்குள் அவர் கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா 18 நாள்களுக்குப் பிறகு ஒப்புக் கொண்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்து வந்த சவூதி நீதிமன்றம், கொலையில் நேரடியாக தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனையும், 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்தது. நான்கு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT