உலகம்

’27 ஆண்டுகளில் முதல் முறையாக’ மிஸ் டீன் சர்வதேச மகுடத்தை வென்ற இந்தியப் பெண்!

23rd Dec 2019 09:40 AM

ADVERTISEMENT

 

மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி உலகின் மிகப் பழமையான போட்டியாகும். 27 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவரும் இப்போட்டியில் வெற்றி பெறவில்லை.  இந்த ஆண்டு வதோதராவைச் சேர்ந்த ஆயுஷி தோலாகியா (16) இந்தியாவுக்கான கிரீடம் வென்றார். இந்நிகழ்வு 19 டிசம்பர் 2019 அன்று நடைபெற்றது.

பாரம்பரிய கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த 11-ஆம் வகுப்பு மாணவி, இந்த ஆண்டு சிறந்த ஆடை விருதும், சிறந்த பேச்சாளர் விருதையும் வென்றுள்ளார்.  மிஸ் டீன் சர்வதேச மகுடத்துக்காக 22 நாடுகள் போட்டியிட்டன; பராகுவேவைச் சேர்ந்த யெசீனியா கார்சியா முதல் ரன்னர்-அப் ஆகவும், போட்ஸ்வானியாவைச் சேர்ந்த அனிசியா இரண்டாம் ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

ஆயுஷி தோலக்கியா தனது இறுதி கேள்விக்கான பதிலால்  நீதிபதிகளின் கவனத்தை கவர்ந்தார். "தனி நாடுகளாக இல்லாமல் ஒரே உலகம், ஒரே அரசாங்கமும்  என இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு அவரது பதில் கூர்மையாக இருந்தது.

ஆயுஷி கூறுகையில்: "ஒரே உலகம், ஒரே அரசாங்கமும்  என இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, காரணம் ஒவ்வொரு நாடும் அவற்றின் புவியியல் பகுதி, மக்களின் பழக்க வழக்கம் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றில் பிரிக்கப்பட்டுள்ளன. உலகின் அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்பதை நன்கு அறிவார்கள்.

ஒரு இந்தியராக இருப்பதால், "வசுதைவ குடுமகம்’ என்றுதான் நான் நினைக்கிறேன். அதாவது உலகம் ஒரு குடும்பம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  எனவே, வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு அரசாங்கம் என்று பிரிந்திருந்தாலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம்.  அன்பும் அமைதியையும் கொண்டவர்கள். " என்றார்.

வியட்நாமில் இருந்து து ஃபான் மிஸ் டீன் ஆசியாவையும், இத்தாலியைச் சேர்ந்த மரியா லூயிசா பிராஸ் மிஸ் டீன் ஐரோப்பாவையும், போட்ஸ்வானாவைச் சேர்ந்த அனிசியா மிஸ் டீன் ஆப்பிரிக்காவையும், பிரேஸிலிலிருந்து அலெக்ஸாண்ட்ரா சாண்டோஸ் மிஸ் டீன் அமெரிக்காவையும் வென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT