உலகம்

இறக்குமதி சுங்க வரி பற்றிய சீனாவின் கொள்கை

23rd Dec 2019 12:13 PM

ADVERTISEMENT

 

இறக்குமதியை ஆக்கமுடன் விரிவுப்படுத்தி, இறக்குமதியின் உள்ளார்ந்த ஆற்றலைத் தீவிரமாக்கி, இறக்குமதியின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 2020ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நாள் தொடங்கி, 850க்கும் அதிகமான வணிகப் பொருட்களின் மீது அதிக சலுகையுடைய நாட்டின் மீதான சுங்க வரியை விட குறைந்த அளவிலான சுங்க வரியைச் சீனா வசூலிக்கும். 

மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றி, உலகத்துக்குத் திறந்து வைக்கப்படும் உயர் வரையறையுடைய தாராள வர்த்தக மண்டல வலையமைப்பை உருவாக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு, 23 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சில வணிகப் பொருட்களின் மீது சீனா உடன்படிக்கையின்படி தொடர்ந்து வரி வசூலிக்கும். அவற்றில், நியூசிலாந்து, பெரு, கோஸ்டாரிகா, ஸ்விட்சர்லாந்து, ஐஸ்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜார்ஜியா, சிலி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தாராள வர்த்தக உடன்படிக்கையிலும் ஆசிய-பசிபிக் வர்த்தக உடன்படிக்கையிலும் தொடர்புடைய வணிகப் பொருட்களின் மீதான சீனாவின் சுங்க வரி மேலும் குறையும். 

இது குறித்து, சீன அரசவையின் சுங்க வரி ஆணையம் கூறுகையில், சரிப்படுத்தப்படும் இந்தக் கொள்கை இறக்குமதி செலவைக் குறைத்து, மேலும் உயர் தரமுள்ள திறப்புத் தன்மையுடைய பொருளாதார அமைப்புமுறையை முன்னேற்றி, வெளிநாட்டுத் திறப்புப் பணியின் தரத்தை மேம்படுத்துவதற்குத் துணை புரியும் என்று தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT