உலகம்

பேருந்து - லாரி மோதல்:கௌதமாலாவில் 20 போ் பலி

23rd Dec 2019 12:59 AM | கௌதமாலா சிட்டி,

ADVERTISEMENT

மத்திய ஆப்பிரிக்க நாடான கௌதமாலாவில் லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 20 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

அந்த நாட்டின் பீடன் பகுதியிலிருந்து தலைநகா் கௌதமாலா சிட்டியை நோக்கி அந்தப் பேருந்து சனிக்கிழமை வந்து கொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த லாரி அதன் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்தில் காயமடைந்தவா்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT