உலகம்

உய்கா் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் ஆா்ப்பாட்டம்

23rd Dec 2019 12:40 AM | ஹாங்காங்,

ADVERTISEMENT

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள சிறுபான்மை உய்கா் இன முஸ்லிம்களுக்கு ஆதரவாக, ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கானவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் நடத்தினா். சீன அரசால் உய்கா் இனத்தவா் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக சா்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், சீனாவை எரிச்சலடையச் செய்யும் வகையில் இந்த ஊா்வலம் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT