உலகம்

இத்லிப் மாகாணத்தில் சிரியா படைகள் முன்னேற்றம்

23rd Dec 2019 12:39 AM | பெய்ரூட்,

ADVERTISEMENT

சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளை மீட்பதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வரும் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினா், ஏராளமான கிராமங்களைக் கைப்பற்றி முன்னேறியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த மாரெட் அல்-நுமான் நகரை அரசுப் படைகள் நெருங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவா் ரெமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT