உலகம்

சீனப் பொருளாதாரத்தின்  சீரான வளர்ச்சிப் போக்கு நீண்டகாலத்துக்கு மாறவில்லை!

16th Dec 2019 06:07 PM

ADVERTISEMENT

 

கடந்த நவம்பர் திங்கள் சீனப் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டது. முக்கிய பொருளாதார குறியீட்டு எண்கள்,  எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகரித்துள்ளது. சீனப் பொருளாதாரம் நிலையாக வளர்ந்து வரும் போக்கில் மேம்பாடு அடைந்துள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிவர பணியகம் 16ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

முதலில்,  வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வர்த்தகம், அன்னிய முதலீடு ஆகிய துறைகளில் நிலைப்புத்தன்மை காணப்பட்டது. இவ்வாண்டின் முதல் 11 திங்களில், முழு நாட்டின் நகரப்புறங்களிலும் புதிதாக அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை, ஒரு கோடியே 27 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். 2019ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இலக்கு முன்னதாகவே நனவாக்கப்பட்டது.  இக்காலத்தில்,  சீனாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள அன்னிய முதலீட்டுத்தொகை 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

நிலையாக வளர்ந்து வரும் போக்கில், பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் தொழில்களின் கட்டமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் அடைந்துள்ளன. பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டுத் தேவையின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. இவற்றில், மக்களின் நுகர்வுத் துறையில் சேவை நுகர்வின் பங்கு கிட்டத்தட்ட 50 விழுக்காட்டை எட்டியது.

ADVERTISEMENT

தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில், சீனப் பொருளாதாரம் இத்தகைய சாதனை  பெறுவது எளிமையானது அல்ல. இந்த சாதனைக்கு, சீனாவின் பெரும் சந்தை மற்றும் உள்நாட்டுத் தேவை ஆகியவை வலுவான ஆதாரமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முழு ஆண்டின் வளர்ச்சி இலக்குகளை நனவாக்கும் அடிப்படையை சீனா கொண்டிருப்பதை, புதிய பொருளாதார புள்ளி விவரங்கள் மேலும் எடுத்துக்காட்டுகின்றன. சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு சீராக வளர்ந்து வரும் போக்கு மாறவில்லை என்ற கருத்தை அது மீண்டும் நிரூபித்துள்ளது. 

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT