உலகம்

நவம்பரில் சீனப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகரிப்பு

16th Dec 2019 06:02 PM

ADVERTISEMENT

 

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 16-ஆம் நாள் வெளியிட்ட புதிய தகவலின்படி, நவம்பர் திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய சீனத் தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகம்.

இது அக்டோபர் திங்களில் இருந்த அதிகரிப்பு வேகத்தை விட 1.5 விழுக்காடு அதிகம். இவ்வாண்டின் முதல் 11 திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய சீனத் தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, 5.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான அதிகரிப்பு வேகத்தை போலவே உள்ளது.

இதற்கிடையில் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாட்டு வர்த்தகக் குழுக்களின் கூட்டு முயற்சியுடன், சமநிலை, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இரு தரப்புகள் முதல் கட்ட வர்த்தக உடன்படிக்கையின் அம்சங்கள் தொடர்பாக உடன்பாட்டை எட்டியுள்ளன.

ADVERTISEMENT

இது, சந்தையின் உறுதியின்மையைக் குறைத்து, நம்பிக்கையை அதிகரித்து, சீன மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT