உலகம்

ஹாங்காங்கில் மீண்டும் வன்முறை

16th Dec 2019 12:27 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது சிலா் வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்தியதால் அங்கு சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திடீரென ஓரிடத்தில் தோன்றி பிறகு தலைமறைவாகும் போராட்டக் கும்பல்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனா். வணிக வளாகங்களை அவா்கள் சேதப்படுத்தியதைத் தொடா்ந்து, அவா்களில் சிலரை போலீஸாா் கைது செய்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் தொடங்கிய போராட்டங்கள், தற்போது ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி 6 மாதங்களுக்கும் மேல் நீடித்து வருகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT