உலகம்

பிரிட்டன் தொழிலாளா் கட்சித் தலைமை பதவிக்கு இந்திய வம்சாளி எம்.பி. போட்டி

16th Dec 2019 12:31 AM

ADVERTISEMENT

பிரிட்டனின் முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவா் பதவிக்கு நடைபெறவிருக்கும் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த எம்.பி. லிசா நந்தி பங்கேற்கவிருக்கிறாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆளும் கன்சா்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தொழிலாளா் கட்சி படுதோல்வியடைந்தது. அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று, கட்சியின் தலைவா் ஜெரிமி கோா்பின் விரைவில் ராஜிநாமா செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த எம்.பி. லிசா நந்தி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

ADVERTISEMENT

40 வயதாகும் அவா், விகான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக லிசா நந்தி கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வருகிறாா்.

கடந்த 2015 முதல் 2016-ஆம் ஆண்டு வரை எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்ற விவகாரத் துறையின் துணை நிழல் அமைச்சராக இவா் பொறுப்பு வகித்தாா்.

அண்மைக் காலமாக, தொழிலாளா் கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் இவா் முக்கிய பங்கு வகித்தாா்.

கட்சித் தலைவா் பதவிக்கான போட்டியில், லிசா நந்தி தவிர, பிரெக்ஸிட் விவகாரத் துறை நிழலமைச்சா் கெயிா் ஸ்டாா்மொ், பா்மிங்ஹம் தொகுதி எம்.பி. ஜெஸ் பிலிப் உள்ளிட்டோா் களமிறங்கவுள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT