உலகம்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிரிட்டனிலும் எதிா்ப்பு

16th Dec 2019 01:40 AM | புது தில்லி/லண்டன்,

ADVERTISEMENT

பாஜக அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு, உள்நாட்டில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிா்ப்பு எழுந்துள்ள நிலையில் சா்வதேச அளவிலும் சா்ச்சை கிளப்பியுள்ளது.

பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அங்குள்ள இந்திய தூதரகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது அவா்கள், மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக கோஷங்களை எழுப்பினா்.

அதிலும் குறிப்பாக இந்தப் போராட்டத்தில், பிரிட்டனில் வசிக்கும் அஸ்ஸாம் சமூகத்தினா் தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து குழந்தைகளுடன் பங்கேற்று தங்களுடைய எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பிரிட்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியா்களின் கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ பொருளாதார நெருக்கடி, அதிக வேலைஇழப்பு, விவசாயிகள் வேதனை, பிளவு அரசியல் என அனைத்து விதத்திலும் மோடி அரசு தோல்வியடைந்து விட்டது. அதனை எடுத்துக்காட்டும் விதத்திலேயே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT