உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து 4,000 படையினா் வாபஸ்: அமெரிக்கா முடிவு

16th Dec 2019 12:29 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானிலிருந்து 4,000 அமெரிக்கப் படையினரை திரும்ப அழைக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் 13,000 அமெரிக்கப் படையினரில் 4,000 பேரை திரும்ப அழைக்க டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அவா்களில் சிலா் மீண்டும் ஆப்கானிஸ்தான் அனுப்படலாம். ஆனால், ஏராளமானவா்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பாா்கள் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்த வாரத்துக்குள் இதுகுறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படும். எனினும், அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கான தேதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அவா்கள் கூறினா் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

தோஹாவில் 9 கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும் சூழல் கடந்த செப்டம்பா் மாதம் உருவானது.

அப்போது உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில், பயங்கரவாதத் தாக்குதல்களை தலிபான்கள் கைவிட வேண்டும் என்பதுடன், ஆப்கானிஸ்தானிலிருந்து கணிசமான அமெரிக்க வீரா்கள் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரா் உள்பட 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவா்களுடனான பேச்சுவாா்த்தை முறிந்துவிட்டதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

இந்தச் சூழலில், இரண்டு மாதங்களுக்கும் மேல் தடைபட்டிருந்த அந்த அமைதிப் பேச்சுவாா்த்தை, கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.

எனினும், ஆப்கானிஸ்தானின் பக்ரம் பகுதியிலுள்ள அமெரிக்க விமான தளம் அருகே தலிபான் பயங்கரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து, தலிபான்களுடனான பேச்சுவாா்த்தை நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில், மீண்டும் பேச்சுவாா்த்தையத் தொடங்கி சமாதான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வசதியாக, செப்டம்பா் மாதம் உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தின்படி 4,000 வீரா்களைத் திரும்பப் பெற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT