உலகம்

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றி சீன-அமெரிக்காவின் முதல் கட்ட உடன்படிக்கை!

14th Dec 2019 10:45 AM

ADVERTISEMENT


சமநிலை, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவும் அமெரிக்காவும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய முதல் கட்ட உடன்படிக்கை தொடர்பாக உடன்பாட்டை எட்டியுள்ளன. 

அறிவுசார் சொத்துரிமை, தொழில் நுட்பப் பரிமாற்றம், நிதித் துறை சேவை, சர்ச்சைத் தீர்வுக்கான வழிமுறை உள்ளிட்டவை இவ்வுடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளன. தவிரவும், சீன உற்பத்திப் பொருட்களின் மீதான கூடுதல் வரி வசூலிப்பை அமெரிக்கா படிப்படியாக குறைக்கும். அத்துடன் வரி வசூலிப்பு அளவு அதிகரிப்பதிலிருந்து குறைவாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கருத்துவேற்றுமையைப் பயனுள்ள முறையில் நீக்குவதற்கும் இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் நிதான வளர்ச்சிக்கும் இவ்வுடன்படிக்கை துணை புரியும் என்று சீனத் தரப்பு கருதுகின்றது. 

மேலும், உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் சிக்கிக்கொள்ளும் பின்னணியில், இவ்வுடன்படிக்கை உலகச் சந்தையின் மீதான நம்பிக்கையை அதிகரித்து, இயல்பான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கும் சிறந்த சூழ்நிலையையும் உருவாக்கும். குறிப்பிட்ட ஒழுங்குமுறை நிறைவேற்றப்பட்டப் பிறகு, இரு தரப்புகள் இவ்வுடன்படிக்கையில் அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிட உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT