உலகம்

ஹாங்காங் போராட்டத்தில் முதியவா்உயிரிழந்த விவகாரம்: 5 போ் கைது

14th Dec 2019 11:01 PM | ஹாங்காங்,

ADVERTISEMENT

ஹாங்காங்கில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, செங்கல் தாக்கி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் சனிக்கிழமை கூறுகையில், கைது செய்யப்பட்ட அனைவரும் 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் என தெரிவித்தனா். கொலை, கலவரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.

ஹாங்காங் போராட்டங்களின்போது, ஜனநாயக ஆதரவாளா்களும், அரசு ஆதரவாளா்களும் செங்கல்களை வீசி ஒருவரை ஒருவா் கடந்த மாதம் 13-ஆம் தேதி தாக்கிக் கொண்டனா். அப்போது அங்கிருந்த 70 வயது முதியவா் மீது கல் பட்டதில், அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT