உலகம்

சோமாலியாவில் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

11th Dec 2019 02:46 PM

ADVERTISEMENT

சோமாலியாவில் ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். 

சோமாலியா, மொகதிசுவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று காவல்துறை உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இருத்தரப்பினருக்கு இடையே நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பேர் பலியாகினர். 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சோமாலிய முன்னாள் உள்துறை அமைச்சர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

மேலும் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் என்கிற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT