ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி கணக்கு ஹேக்கர்களால் முடக்கம்

ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது.
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி கணக்கு ஹேக்கர்களால் முடக்கம்

ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து நிற, இன வெறிக் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் குண்டு வைப்பது தொடர்பாகவும் பதிவிடப்பட்டிருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்னர் தான் இந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

ஹேக் செய்யப்பட்ட வெளியிட்ட பதிவுகளில் சக்லிங் ஸ்குவாட் என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருந்தது. இது சமீபத்தில் பல முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டபோது பதிவிடப்பட்டிருந்த அதே ஹேஷ்டேக் ஆகும். மேலும் இந்த முடக்கங்களுக்கு காரணமான ஹேக்கர் குழுவாக இந்த ஹேஷ்டேக் கண்டறியப்பட்டுள்ளது.

ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண ட்விட்டர் கணக்குகளின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் பயனாளர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com