உலகம்

மெக்ஸிகோ கேளிக்கை விடுதிக்கு தீவைப்பு: 25 பேர் பலி

29th Aug 2019 12:57 AM

ADVERTISEMENT


வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில், கேளிக்கை விடுதியொன்றுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததில் 25 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மெக்ஸிகோவின் கோட்ஸாகோல்கோஸ் நகரில் அமைந்துள்ள கேளிக்கை விடுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த மர்ம நபர்கள், அங்கு பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர்.
இதில், அந்த விடுதியில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீவைப்பில் ஈடுபட்ட நபர்கள் கேளிக்கை விடுதியில் வாயிலில் தடுப்புகளை ஏற்படுத்தி, உள்ளே இருந்தவர்கள் தப்பியோடுவதைத் தடுத்ததாகவும், சம்பவத்தின்போது விடுதிக்குள் பலத்த இசை ஒலித்துக் கொண்டிருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்த பிறகுதான் பலருக்கு அதுபற்றி தெரிய வந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடையே நடைபெற்று வரும் போட்டியில் பல குற்றச் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், அந்தக் கும்பல்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த தீவைப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT