ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் சிரியாவில் உள்ளதாக ரஷியா செவ்வாய்கிழமை தெரிவித்தது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான ரஷிய துணைப் பிரதிநிதி ஜென்னடி குஸ்மின் கூறுகையில்,
சிரியாவில் தற்போதைய சூழலில் ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதர பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அங்கே பயங்கர ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக, சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், ஸ்போராடிக் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.