காஸா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹமாஸ் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நாட்டு ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாலஸ்தீன எல்லைக்குள்பட்ட காஸா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ராக்கெட் மூலம் தெற்கு இஸ்ரேல் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் எல்லைக்குள் வந்த மூன்று ராக்கெட்டுகளில், இரண்டை பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. இத்தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக வடக்கு காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தின.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதி தங்கியிருந்த நிலை மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பாலஸ்தீன பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.