ஹாங்காங் போராட்டத்தில் மீண்டும் வன்முறை 

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது.
ஹாங்காங் போராட்டத்தில் மீண்டும் வன்முறை 

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 

ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன "ஸ்மார்ட்' விளக்குக் கம்பங்களை நீக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

அந்த விளக்குக் கம்பங்கள் மூலம் தங்களை ஹாங்காங் அரசு வேவுபார்ப்பதாகக் குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், அவற்றில் ஒரு கம்பத்தை மின்சார ரம்பம் கொண்டு அறுத்துச் சாய்த்தனர்.
 

நகரின் காவல் நிலையத்துக்கு எதிரும், அதன் அருகிலுள்ள பல்பொருள் அங்காடியிலும் தடுப்புகளை அமைத்து முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கலகத் தடுப்புப் போலீஸார் எச்சரித்தனர்.
 

எனினும், அவர்கள் கலைந்து செல்லாததைத் தொடர்ந்து போலீஸார் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர்.
 

சில பகுதிகளில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். தடியடி நடத்திய போலீஸாருடன் மூங்கில் தடிகள், பேஸ்பால் மட்டைகள் போன்றவற்றைக் கொண்டு பலர் மோதலில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 

ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 

இந்தப் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பெரும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
 

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com