உலகம்

ஆளில்லா போர்க் கப்பல்: சீனா அறிமுகம்

23rd Aug 2019 01:08 AM

ADVERTISEMENT


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஆளில்லா போர்க் கப்பலை சீன அரசின் சைனா ஷிப் பில்டிங் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம், அந்த அமைப்பின் 716 மற்றும் 702 ஆய்வு நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கியுள்ள அந்தக் கப்பல், சண்டையில் ஈடுபடுத்தப்படுவதற்கு தயாரான நிலையை அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாரி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆளில்லா போர்க் கப்பலை, வான்பாதுகாப்பு, எதிரி நாடுகளின் நீர்மூழ்கி மற்றும் போர்க் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் என்று அந்த நாளிதழ்
தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT