விவாதத்தில் எம்.பி; அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து பாலூட்டிய சபாநாயகர் 

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் எம்.பி ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது, அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து சபாநாயகர் பாலூட்டிய சம்பவம் நிகழந்துள்ளது.
விவாதத்தில் எம்.பி; அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து பாலூட்டிய சபாநாயகர் 

வெல்லிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் எம்.பி ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது, அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து சபாநாயகர் பாலூட்டிய சம்பவம் நிகழந்துள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி சார்பாக எம்.பியாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை முறை கருவூட்டல் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் காரணமாக 'பேறுகால விடுமுறையில்’ இருந்த அவர் புதனன்று தனது குழந்தை ஸ்மித் உடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.

அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவரது குழநதையை வாங்கிக் கொண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், தனது இருக்கையில் குழநதையை மடியில் வைத்துக் கொண்டு பாட்டிலில் பாலூட்டினார். அவரது இந்த செய்கை அனைவராலும் வரவேற்கப்பட்டது.

இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் பதிவிட்டிருந்ததாவது:

பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com