ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ. 12.5 கோடி கூடுதல் நிதியுதவி  

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ. 12.5 கோடி கூடுதல் நிதியுதவி  

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா மனிதநேய அடிப்படையில் ரூ. 12.5 கோடி கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளது.

காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா மனிதநேய அடிப்படையில் ரூ. 12.5 கோடி கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளது.

தலிபான்களுடன் நிகழ்ந்த தொடர் உள்நாட்டு யுத்தத்தினால் ஆப்கனிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரசுக்கு தற்போது தனது படைகள் மூலம் ஆதரவளித்து வரும் அமெரிக்கா, கூடிய விரைவில் அங்கிருந்து தனது படைகளை வாபஸ் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்நாட்டிற்கு பல்வேறு விதமான சீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்கா தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா மனிதநேய அடிப்படையில் ரூ. 12.5 கோடி கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளது .

இதுதொடர்பாக செவ்வாயன்று காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கனில் உள்நாட்டில் இடப்பெயர்வு செய்து வசிப்பவர்கள், சண்டைகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இனக்குழுக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவர்கள் என அனைவரது நலனுக்காகவும், மனிதநேய அடிப்படையில் பல்வேறு  உதவிகளை செய்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு இத்தகைய உதவிகளை செய்வதற்கு ஏதுவாக நிதி திரட்டுவதற்காக ஐநா சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவி கோரிக்கைக்கு, போதுமான உதவி செய்யுமாறு இதர நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். இதுவரை 27 சதவீத நிதி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியையும் சேர்த்து இந்த நிதியாண்டில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள நிதியுதவியின் அளவு ரூ. 19 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com