வங்கதேச குடிசைப் பகுதியில் தீவிபத்து: 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக சுமார் 10,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேச குடிசைப் பகுதியில் தீவிபத்து: 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக சுமார் 10,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி எர்ஷாத் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: டாக்காவின் மிர்புர் குடிசைப் பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதன் காரணமாக, சுமார் 10,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் என்றார் அவர்.
தகுந்த நேரத்தில் செயல்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ஏராளமானோருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
பெரும்பாலும் தினக் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் அந்தப்  பகுதி மக்கள், பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்ததால் பெரிய அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
வீடுகளை இழந்தவர்கள் அருகிலுள்ள பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளர். அவர்களுக்கு உணவு, நீர், கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.
பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் பெரும் குறைபாடுகள் இருப்பதால், டாக்காவில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் அங்கு தீவிபத்துகளில் இதுவரை சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com