உலகம்

பாகிஸ்தானில் சேதப்படுத்தப்பட்ட இந்திய மன்னர் சிலை: காஷ்மீருக்கு பதிலடியா? 

11th Aug 2019 05:09 PM

ADVERTISEMENT

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதியை  ஆட்சி செய்தவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்.இவர் 1839 ஆம் ஆண்டு லாகூரில் மரணம் அடைந்தார்.  இவரது 180-வது பிறந்த தினத்தின் போது இப்போதைய பாகிஸ்தானின் லாகூர் துறைமுகத்தில் 9 அடி உயரம் கொண்ட அவரது சிலை திறக்கப்பட்டது. குதிரை மீது , கையில் வாளுடன் அமர்ந்து இருக்கும் வகையில் அந்த சிலையானது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மன்னர் ரஞ்சித் சிங்கின் சிலை சனிக்கிழமையன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வாயிலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான்  ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சேதப்படுத்தப்பட்ட சிலையை மறுசீரமைப்பு செய்வோம் என்று லாகூர் நகர ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT