திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

மியான்மர்: நிலச்சரிவில் 34 பேர் பலி

DIN | Published: 11th August 2019 12:40 AM

மியான்மரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மியான்மரில் பெய்து வரும் பருவமழையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த நாட்டின் மே பியார் கோனே என்ற மலை கிராமத்தில் மழை காரணமாக வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 16 வீடுகள் முழுமையாகப் புதையுண்டன.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சனிக்கிழமைவரை 34 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதையுண்ட பகுதிகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா என மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கிய 47 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், மேலும் 80 பேர் தொடர்ந்து மாயமாகியுள்ளதாகத் தெரிகிறது. எனவே, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆப்கன் திருமண நிகழ்ச்சியில்  தற்கொலைத் தாக்குதல்: 63 பேர் பலி
பிரதமர் மோடி-பூடான் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
ஹாங்காங்: ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம்
காஸா: 3 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை
வங்கதேச குடிசைப் பகுதியில் தீவிபத்து: 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு