உலகம்

பிரிட்டன்: "கிர்பான்' வைத்திருந்த சீக்கியர் கைது

11th Aug 2019 12:39 AM

ADVERTISEMENT

பிரிட்டனில், தங்களது மத அடையாளமான "கிர்பான்' எனப்படும் கத்தியை வைத்திருந்த சீக்கியரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நாட்டில் மத அடையாளங்களை வைத்திருப்பதற்கு சட்டம் அனுமதி அளித்துள்ள நிலையிலும் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கண்டனத்துக்குள்ளானது.
பர்மிங்ஹம் நகரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து அந்த நகர காவல் துறையினர் கூறுகையில், குறிப்பிட்ட அந்த நபரிடம் காவலர் விசாரணை நடத்தியபோது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT