திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷியா ஆதரவு

DIN | Published: 11th August 2019 01:35 AM

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷியா ஆதரவளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து தொடர்பான சட்டப் பிரிவுகளை மத்திய அரசு அண்மையில் திரும்பப் பெற்றது. அத்துடன், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கைக்கு ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "தற்போதைய நிலையை இந்தியாவும், பாகிஸ்தானும் மோசமாக்கி விடக் கூடாது. அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே இந்திய அரசு மாற்றங்களை செய்தது. இந்தியா-பாகிஸ்தானின் நட்புறவு தொடர ரஷியா எப்போதும் ஆதரவளிக்கும். அரசியல் ரீதியிலும், ராஜீய ரீதியிலும் இரு நாடுகளும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்னைகளை இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தது.
இதனிடையே, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான இந்தியர்கள் திரண்டு, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் முடிவை வரவேற்பதாகத் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆப்கன் திருமண நிகழ்ச்சியில்  தற்கொலைத் தாக்குதல்: 63 பேர் பலி
பிரதமர் மோடி-பூடான் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
ஹாங்காங்: ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம்
காஸா: 3 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை
வங்கதேச குடிசைப் பகுதியில் தீவிபத்து: 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு