புதிய அதிபர் தேர்வு: உக்ரைன் - ரஷியா இடையே நல்லுறவு மேம்பட வாய்ப்பு

உக்ரைனில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வொலோதிமீர் ஸெலன்ஸ்கியின் தலைமையின் கீழ் அந்நாட்டுடனான உறவு மேம்படுவதற்கு
புதிய அதிபர் தேர்வு: உக்ரைன் - ரஷியா இடையே நல்லுறவு மேம்பட வாய்ப்பு

உக்ரைனில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வொலோதிமீர் ஸெலன்ஸ்கியின் தலைமையின் கீழ் அந்நாட்டுடனான உறவு மேம்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ரஷிய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் நம்பிக்கை தெரிவித்தார்.
உக்ரைனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், நகைச்சுவை நடிகரும், அரசியலில் முன் அனுபவம் இல்லாதவருமான வொலோதிமீர் ஸெலன்ஸ்கி வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, புதிய அதிபரின் தலைமையின் கீழ் அந்நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மெத்வதேவ் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உக்ரைனில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட பெட்ரோ போரோஷென்கா தோற்கடிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள், உக்ரைன் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையே உணர்த்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு உள்நாட்டுப் பிரச்னையால் ரஷியாவுக்கு ஆதரவான அதிபர் விக்டர் யானோகோவிச் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டில், உக்ரைனில் இருந்து பிரிந்த கிரைமீயாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போதிருந்து உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது, உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் மரின்கா நகரில், அதிபர் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com