வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

பிலிப்பின்ஸ், அமெரிக்காவில் நிலநடுக்கம்

DIN | Published: 23rd April 2019 01:12 AM
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து வெளியே வீதிகளில் தஞ்சம் அடைந்தவர்கள்.


பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல்,  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் பல பகுதிகளில் 4 முறை சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அலாஸ்கா வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
கினிக்-ஃபேர்வியூவுக்கு கிழக்கே 42 கி.மீ. தொலைவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.04 மணிக்கு (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவானது.
முன்னதாக, பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3,900 பேர் வசிக்கும் வல்டேஸின் வடமேற்கு பகுதியிலிருந்து 39கி.மீ. தொலைவில் 18 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் குடியிருப்புப் பகுதிகளில் நன்கு உணரப்பட்டது.
இதேபோன்று, சனிக்கிழமை இரவு 10.31 மணிக்கும் அலாஸ்காவின் தீவு மண்டலமான ஆன்டிரியன் பகுதியில் மிதமான அளவில் நிலநடுக்கம் உண்டானது. 13 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானது.
சனிக்கிழமை மாலை 7.39 மணிக்கும் ஸ்டெர்லிங்கின் தென்மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5,600 பேர் வசிக்கும் ஸ்டெர்லிங் பகுதியில் 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தையும் குடியிருப்புவாசிகள் நன்கு உணர்ந்ததாக அலாஸ்கா நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது:
வடகிழக்கு மணிலாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கேஸ்ட்லிஜோஸ் நகரத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை மாலை 5.11 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது. கடலுக்கடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானது என அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், தலைநகர் மணிலாவில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. பொதுமக்கள் உயிருக்கு பயந்து கட்டடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். போராக் மற்றும் லூபோ நகரங்களில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ரகசிய ராணுவ ஆபரேஷனை இந்தியா மேற்கொள்ளலாம் : இம்ரான்கான் புலம்பல் 
அமேசான் காட்டில் என்ன நடந்தது? இது சர்வதேசப் பிரச்னையா?
இங்கிலாந்து ஹோட்டலில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் மீது முட்டை வீச்சு
சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை: பாக்., சீனாவுக்கு ஐ.நா. கண்டனம்
மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்