செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

இலங்கையில் அதிர்ச்சி: பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

DIN | Published: 22nd April 2019 03:52 PM


கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இலங்கையில் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளைத் தேடும் பணியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக மன்னார் ஓலைத் தொடுவாய் பகுதியில் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை செயலிழக்கச் செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மோடி 22-ஆம் தேதி பிரான்ஸ் பயணம்
லிதுவேனிய பிரதமருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு
பாக். ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு
வெறுப்பூட்டும் பேச்சு: ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை
அமெரிக்கா சிறைபிடிக்க உத்தரவிட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மாயம்