விண்ணில் செலுத்தப்பட்டது நேபாளத்தின் முதல் செயற்கைக்கோள்

நேபாளத்தின் முதல் செயற்கைக்கோள் அமெரிக்க ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டது நேபாளத்தின் முதல் செயற்கைக்கோள்


நேபாளத்தின் முதல் செயற்கைக்கோள் அமெரிக்க ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதுகுறித்து நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி (என்ஏஎஸ்டி) தெரிவித்ததாவது:
நேபாள விஞ்ஞானிகள் உருவாக்கிய முதல் செயற்கைக்கோளான நேபாளிசாட்-1, அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை நள்ளிரவு 2.31 மணிக்கு (நேபாள நேரம்) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .
பூமியை 400 கி.மீ. தொலைவில் சுற்றிவரவிருக்கும் அந்த செயற்கைக்கோள், தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு மாதத்துக்கு நிலைநிறுத்தப்படும். அதற்குப் பிறகு, அது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படும். நேபாளத்தின் புவியியல்சார் தகவல்களைப் பெறும் வகையில், தொடர்ந்து பல்வேறு படங்களைப் பிடித்து நேபாளிசாட்-1 அனுப்பும்.
நேபாள தேசியக் கொடியும், என்ஏஎஸ்டி அமைப்பின் சின்னமும் அந்த செயற்கைக்கோளில் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அந்த ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் மூலம் விண்வெளி ஆய்வுத் துறையில் நேபாளம் தடம் பதித்திருப்பது, அந்த நாட்டினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com