தேவாலயத் தீவிபத்து: தீயணைப்பு வீரர்களுக்கு பிரான்ஸ் கெளரவம்

பிரான்ஸில் மிகப் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தீவிபத்தின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சேதங்களைக் குறைத்த தீயணைப்பு வீரர்கள்
பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில், தீயணைப்பு வீரர்களை கெளரவப்படுத்தி அதிபர் இமானுவல் மேக்ரான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி.
பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில், தீயணைப்பு வீரர்களை கெளரவப்படுத்தி அதிபர் இமானுவல் மேக்ரான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி.


பிரான்ஸில் மிகப் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தீவிபத்தின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சேதங்களைக் குறைத்த தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனர்.
இதையொட்டி, பாரிஸ் நகர சிட்டி ஹாலில் வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறும் பிரம்மாண்டமான பதாகைகள் தொங்கவிடப்பட்டன.
பிரான்ஸ் அதிபர் மாளிகையில், அதிபர் இமானுவல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த நாட்டு ராணுவத்தின் அங்கமாகத் திகழும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com